ஜெயலலிதா ஜாமீன் மனு உச்சநீதிமன்ற விசாரணை வரும் வெள்ளிக்கிழமைஜெயலலிதா ஜாமீன் மனு உச்சநீதிமன்ற விசாரணை வரும் வெள்ளிக்கிழமை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக்கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததையடுத்து கடந்த வியாழனன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற பதிவாளரை சந்தித்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை வழங்கினர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் சிக்ரி மற்றும் லோகூர் ஆகியோரின் முன் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனு மீதான விசாரணையை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் கேட்டுக்கொண்டார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும், மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் என்றும் அறிவித்தனர்.

ஆசிரியர்