June 8, 2023 6:38 am

‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் ஈராக்கில் ராணுவ ஹெலிகாப்டரை ஏவுகணையால் வீழ்த்தியது ‘ ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் ஈராக்கில் ராணுவ ஹெலிகாப்டரை ஏவுகணையால் வீழ்த்தியது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டு வீசி தாக்கி வருகின்றன. இருந்தும் அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க முடியவில்லை. ஏனெனில் தீவிரவாதிகளிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன.

அதன் மூலம் அமெரிக்க ராணுவத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏவுகணைகள் மூலம் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி தகர்க்கின்றனர்.

இதற்கிடையே சமீபத்தில் ஈராக் ராணுவத்தின் எம்.ஐ–35 எம். ரக ஹெலிகாப்டர் பாய்ஜி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.

இத்தாக்குதல் குறித்த வீடியோவை சமீபத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டனர். அதில், ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் தோளில் சுமந்தபடி ஹெலிகாப்டரை ஏவுகணை மூலம் தாக்கி அழிப்பது தெரிய வந்தது.

அந்த ஏவுகணை சீனாவில் தயாரிக்கப்பட்டது. இது போன்ற பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தீவிரவாதிகளிடம் உள்ளன. எனவே தான் அமெரிக்கா தான் ஈராக்குக்கு கொண்டு வந்த 6 அப்பாச்சி ஹெலிகாப்டரை குண்டு வீச அனுப்ப வில்லை.

அவற்றை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்