இதன் போது சுமார் 100 இற்கும் அதிகமான வேலையில்லா பட்டதாரிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அணிதிரண்டிருந்தனர்.

 இவர்கள் பட்டதாரிகளுக்கான நியமனத்தின் போது அவர்கள் உள்வாரி வெளிவாரி என வேறுபடுத்தப் படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து வேலை வாய்ப்பை கொடுக்கும் போது  உள்வாரி பட்டதாரிகள்  , வெளிவாரி பட்டதாரிகள் என வேறுபடுத்த வேண்டாம் என்றும்,  அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புகளை பெற்றுதருமாறும்  கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைககளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்றனர்.

இதன் போது லோட்டஸ் சுற்றுவட்ட பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டது. ஆகவே, ஆரம்ப்பாட்டகாரர்கள் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சிற்கு முன்பாக ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.