பாடசாலை சீருடையில் பஸ்களுக்காக காத்திருக்கின்ற மாணவர்களை சேவைத்தூரத்தினை கருத்தில் கொள்ளாது அனைத்து பஸ்களும்  ஏற்றிச்செல்லவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் பஸ் உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.செவ்வேள் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் பொருட்டு இரு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மினிபஸ்கள் பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.