Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்த யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள்!

சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்த யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள்!

2 minutes read

 

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாட அனைவரையும் ஒன்றினைந்து வலுச்சேர்ககுமாறும் யாழ்.பல்கலைக்கழக கரைலப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

அச் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது, “ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம்மக்களும் காலாதி காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றபோதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்த்தியின் விளிம்பில் நின்று இலங்கையின் சுதந்திரத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை ஐரோப்பியரின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்டு 72 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதும் ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் காலணித்துவ ஆட்சி ஒன்றின் கீழே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆண்ட பரம்பரையான நாம் அடங்கி ஒடுங்கிப் போய் இன்னொரு தேசத்தவரினால் அடக்கியாளப்படுவதனை நாம் விரும்பவில்லை.

எமது மண்ணில் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை கண்டறியப்பட வேண்டும் .

நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் இத்தகைய அடிப்படையான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

உலக ஒழுங்கில் சிறுபான்மை இனங்களை பெரும்பான்மை அரசுகளிடம் இருந்து காப்பாற்ற பல சட்டங்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்துள்ளன. அதன் ஆரம்பமாக 1949ம் ஆண்டு ஜெனீவா தீர்மானம் 49 கொண்டு வரப்பட்டிருந்தது.

அதன் தொடர்சியாக பல்கன் குடியரசுகளை முன் நிறுத்தி 1992ம் ஆண்டு ஐ.நா.வின் பாதுகாப்பு சபை தீர்மானத்தில் 780 ஆவது தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் படி இனச் சுதந்திரமானது இனப்படுகொலையின் வரைமுறைகளுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

அந்த வகையில் மேற்குறிப்பிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் என்பவை இனப்படுகொலையாகவே அமைந்து காணப்படுகின்றது இத்தகைய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையாகும்.” என தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More