Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி

4 minutes read

இங்கிலாந்து இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தால் யாழ்ப்பாணப்பல்கலை கழகத்தில் பயிலும் ஏழைமாணவர்களளிற்கான நிதி வழங்கும் ஆரம்ப நிகழ்வுகள் 01.02.2020ம் ஆண்டு சனிக்கிழமை காலை 10 .00 மணியளவில் யாழ்விஷன் மண்டபம் 19.கோணாவளை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவிலில் அமைந்துள்ள யாழ்விஷன் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையினூடாக ஆரம்பமானது.

 சிவாச்சாரியார்கள் ஆசி வழங்கி பேசியதாவது  சிவஸ்ரீ  இ.சுந்தரேஸக்குருக்கள் கூறுகையில்  பல இன்னல்களையும் துன்பங்களையும் கடந்து மாணவர்கள் கல்வி கற்று வருகையில் இன்று இவ்வாறு ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாளின் அருளால்  மாணவர்களுக்கு உதவி    கிடைக்க அருள் புரிந்து உள்ளார் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

தி. உமாசுதக்குருக்கள் கூறுகையில் மாணவர்கள் கல்வி மேம்பாடு குறித்து ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயம் மேற்கொண்டு வரும் இவ்வாறான முயற்சி பாராட்டுக்குரியது மேலும் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் ந. குமரகுருபரசிவாச்சாரியார் அவர்கள் ஆசி வழங்கி பேசியதாவது ஒரு குடும்பம் ஏழ்மையில் துன்புற்று கல்வி கற்க தகுந்த நிதி பற்றாக்குறை காரணமாக பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையில் மாணவர்களின் நிலையை அறிந்து அவர்களு உதவி வழங்க இலண்டன் ஈலிங்க் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாளின் அருள் கிட்டி உள்ளது “காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞானத்தின் மாணப்பெரிது” (தக்க சமயத்தில் ஒருவருக்கு செய்த உதவியானது பூமியை விடம் பெரியதாகும்) என்பது வள்ளுவ பெருந்தகையின் கூற்று உதவி பெறும் மாணவர்கள் இன்னும் கல்வியில் சிறந்து விளங்கி அம்பாளின் அருளால் வாழ்வில் மேலோங்க நல்லாசிகளும் வாழ்த்துக்களும் என்று தெரிவித்தார்.

 நல்லை ஆதீன  குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ  சோமசுந்தரதேசிகபரமாச்சாரியார் ஆசி கூறியதாவது இலங்கையில் பல இடங்களில் இன்னும் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்கும் தருவாயில் நிதி பற்றாக்குறை காரணமாக கல்வியை தொடர்ந்தும் கற்க இயலாது உள்ளது   அந்த வகையில் இம்மாணவர்கள் வாழ்க்கையில் சகல விதமான செல்வங்களும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். என்று கூறினார்.

சின்மயாமிஷன் ஸ்வாமி சிதாகாசானந்தாஅவர்களும்  ஆசி வழங்கிய பொழுது  தர்மம் தலைகாக்கும்  இந்த வாக்கியம் கூறும் விளக்கம் உலகிலேயே மிகவும் முக்கியமானது தர்மமே.இந்த தொண்டை ஏற்பாடு செய்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் அன்னையின் ஆலயத்தின் ஊடாக வழங்கப்படும் நிதியானது உண்மையில் அந்த திருமகளின் அருள் என்பதில் சந்தேகம் சிரிதும் இல்லை மாணவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் எனது நல்லாசிகள்  என்று தெரிவித்தார்.

நிகழ்வில் யாழ் அரச அதிபர் திரு வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர் திரு சரவணபவன் தம்பதியினரும், கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையின் நிறுவனர் திரு சுசீந்திரன் தம்பதியினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இளங்கோ அவர்களும் நல்லூர் பிரதேச செயலக தவிசாளர் திரு தியாகமூர்த்தி முன்னாள் எதிர் கட்சி தலைவர் திரு தவராசா அவர்களும் இலண்டன் சைவ முன்னேற்ற கழக ஆரம்ப கர்த்தா திருவாளர் இராமநாதன் தம்பதியினரும் இலண்டன் வாழ்  திரு சிவனேசன் தம்பதிகளும் மற்றும் பயன் பெறும் பல்கலை கழக மாணவர்களும் பொது மக்கள் மற்றும் நலன்விரும்பகளுமாக சுமார் நூற்றுக்கும் அதிகமான மக்கள் மத்தியில் நிகழ்ந்தது.

மேலும் மாணவர்கள் கல்வி பயிலும் பொருட்டு இலண்டனில் வாழும் அன்னையின்    நல் உள்ளம் படைத்த அடியவர்களாகிய தர்மசீலர்களின் நிதியினை ஆலயத்தின் ஊடாக ஏழைமாணவர்களுக்குமாதாந்தம் ரூபாய் 3000/= வீதம் சுமார் 300 மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பதை திரு க.சுசீந்திரன் அவர்கள் பெருமையுடன்   தெரிவித்தார்.

மேலும் நிதிஉதவியை பெற வந்த மாணவி ஒருவர் உலகத்திலே வெவ்வேறு மதத்தினர்கள் தமது மதத்தை பரப்பும் உள்நோக்குடன் நயவஞ்சகமாக ஏழைகளிற்கும் மாணவர்களுக்கும் நிதி உதவி பொருள் உதவி கல்வி சார் உதவிகளை வழங்கி அவர்களின் வலையில் சிக்க வைத்து மதமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால்   அன்னையின் ஆலயமானது ஏழைமாணவர்களின் கல்விசார் வாழ்வியல் முன்னேற்றத்தின் நலத்தை மட்டுமே முற்றிலுமாக கருதி தர்மவழியில் தொண்டாற்றி வருகின்றதை பெருமையுடன் தெரிவித்து ஆனந்தக் கண்ணீர் மல்கினார்.

மேலும் அம்பாளின் ஆலயத்தின் சேவையானது ஈழத்தில் வாழ்கின்ற அவதியுறும் ஏழைமக்களிற்கும் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More