கொரோனா வைரஸினால் மேலும் 06 பேர் பாதிப்பு; 34ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி, ஜேர்மனிக்குச் சென்ற இரு நோயாளிகளுடன் பயணம் செய்த ஒருவர், பிரித்தானியாவில் இருந்து திரும்பிய ஒருவர் (மட்டக்களப்பை சேர்ந்தவர்) மற்றும் களனி, மாறவில பகுதிகளை சேர்ந்த இருவர் மற்றும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதே இப்போது தமது பாரிய பணியாக இருக்கின்றது என்றும் வெளியில் இருந்து வரும் அபாயத்தை நாங்கள் குறைத்துள்ளோம் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்