கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடிக்க இன்னும் எவ்வளவு காலமாகும்-பில்கேட்ஸ்

கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் 2 வருடம் வரை ஆகலாம் என்று உலக கோடீஸ்வரரும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக  210க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தலாம் என்று சில வருடங்களுக்கு முன்பே  கூறியிருந்தார். இதனால் பில்கேட்ஸ் கூறிய ஒவ்வொரு தகவல்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டே வருகிறது.
இந்த நிலையில் பில்கேட்ஸ் சமீபத்தில் கூறியதாவது:-
கொரோனா வைரஸிற்கான பரிந்துரை செய்யப்படும் தடுப்பு மருந்துகள் சிறந்த பலன் கொடுப்பவையாக இல்லை. பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் உயிர்களை காப்பாற்றுமே தவிர, நம் அனைவரையும் அது பழைய பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருமா என்பது  கேள்வி குறி தான், இதனால் கொரோனா வைரஸூக்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாதவரை உலகிலுள்ள அனைவரும் கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பு இல்லாதவர்களாக தான் இருப்போம்.
உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக , அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் கொரோனா வைரஸூக்கு எதிரான சிறந்த, பாதுகாப்பான மருந்தினை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அந்த மருந்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் அனைத்து நாடுகளுக்கும் விரைவில் சென்றடைய வேண்டும்.
இது மாதிரியான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்க்கு 5 வருடங்கள் ஆகலாம். ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் அயராது முயற்சி செய்து இன்னும் 9 மாதங்கள் அல்லது 2 வருடங்களில் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
-வணக்கம் லண்டனுக்காகஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

ஆசிரியர்