Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மர்மமான முறையில் இறந்த யானைகள் காரணம் இதுவாகவும் இருக்கலாம்?

மர்மமான முறையில் இறந்த யானைகள் காரணம் இதுவாகவும் இருக்கலாம்?

1 minutes read

போட்ஸ்வானா நாட்டின் ஒக்கவாங்கோ டெல்டா பகுதியில் ஒரே மாதத்தில் 350 – க்கும் மேற்பட்ட யானைகள் மர்ம நோய்க்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யானைகளின் இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று போட்ஸ்வானா. வனவிலங்குகள் நிறைந்த நாடு இது. மே மாதத்தில் இங்கு வசிக்கும் யானைகள் ஒவ்வொன்றாக மடிந்து விழுந்துகொண்டிருக்கின்றன. யானைகள் மட்டும் இறப்பதற்கான காரணத்தைத் கண்டுபிடிக்க முடியாமல் அந்த நாட்டு அரசு தவித்து வருகிறது.

யானைகள் இறந்து கிடந்த ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மட்டும் விமானத்தில் பறந்து சென்று ஆய்வு நடத்தியபோது 350 யானைகளின் உடல்களை வன விலங்கு ஆர்வலர்கள் கண்டுள்ளனர். பிரிட்டனச் சேர்ந்த நேஷனல் பார்க் ரெஸ்க்யூ எனும் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் மெக்கேன், “மூன்று மணிநேரத்தில் மட்டும் 169 யானைகளின் உடல்களைப் பார்த்திருக்கிறார்கள். இது எப்போதும் இல்லாத வகையில் மிகமிக அதிகம். கவலை தரக்கூடிய விஷயமும் கூட. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 350 க்கும் மேற்பட்ட யானைகள் இறந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளJ. வறட்சி இல்லாத சமயத்தில், ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் இறந்து கிடப்பது இதற்கு முன் நடக்காத நிகழ்வு. இதற்கான காரணங்களை அறிய முடியவில்லை. யானைகளுக்கு சயனைடு உள்ளிட்ட நஞ்சு வைக்கப்பட்டிருந்தால் அவற்றுடன் மற்ற விலங்குகள் மற்றும் பறவைகளும் இறந்து விழுந்திருக்கும். ஆனால், இங்கு யானைகள் மட்டுமே கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கின்றன.

கடந்த ஆண்டு பரவிய ஆந்த்ராக்ஸ் நோய்க்கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் இறந்தன. ஆனால், இந்த ஆண்டு ஆந்த்ராக்ஸ் பரவவில்லை. பல யானைகள் முகத்தைத் தொங்கபோட்டபடி, வட்ட வடிவத்தில் நடந்து கீழே விழுந்து இறந்துள்ளன. நோய்க் கிருமிகளால் யானைகளின் நரம்பு மண்டலம் தாக்கப்பட்டால் மட்டுமே இந்த மாதிரி யானைகள் நடந்துகொள்ளும்.

சரியான காரணங்களைக் கண்டுபிடிக்காமல், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு நோய்த்தொற்று கிருமிகள் பரவியிருக்கும் என்பதை உறுதியிட்டுக் கூற முடியாது. தற்போது மனிதர்களுக்கு இடையே பரவும் கோவிட் – 19 நோய்த் தொற்றானது விலங்குகளுக்கும் பரவியிருக்கலாம். மண், நீர் ஆகியவற்றின் மூலம் கூட நோய்த் தொற்று யானைகளுக்கு மத்தியில் பரவியிருக்கலாம். ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்தால் தான் யானைகள் இறப்புக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும்” என்றார்.

போட்ஸ்வானா அரசு, ‘ஓரிரு இடங்களில் யானைகளின் தந்தங்கள் வெட்டப்படுகின்றன. அதனால், தந்த வேட்டையில் இவை கொல்லப்பட்டிருக்கலாம்’ என்கிறது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More