உயர்தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு, வெளியிடப்பட்டுள்ள மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக 61 ஆயிரத்து 248 பேர் உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த பெறுபேறுகள் தொடர்பாக 011-2784208, 011-2784537, 011-3188350, 011-3140314 மற்றும் 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்