Sunday, July 25, 2021

இதையும் படிங்க

மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழையால் 112 பேர் உயிரிழப்பு

இந்தியா, மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழை காரணமாக உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்குண்டு சனிக்கிழமை இரவு வரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள்...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது.

நான்கல்ல நாற்பது திருமணமும் செய்வேன்! – வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா,...

இரவு தூக்கமும்.. காலை நேர சோர்வும்…

கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

இந்தியா, இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஷிகர் தவான் தலைமையிலான...

ஆசிரியர்

‘இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து விலகினால்; சர்வதேச அமைப்புக்களிடமே அதற்கான பொறுப்பு’

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாது அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது. 

தன்னுடைய பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்லுமாக இருந்தால் அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்று இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் (Special Adviser on the Prevention of Genocide) அடமா டியங்க் (Adama Dieng) தெரிவித்திருக்கிறார்.

புலம்பெயர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தலின் 12ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வையடுத்து இலங்கையில் குற்றங்களுக்கான பெறுப்புக்கூறல் மற்றும் நீதி பரிகார நடவடிக்கைகளின் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களை மதிப்பீடு செய்தல் எனும் தொனிப்பொருளில் ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவருடைய உரையில் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் வருமாறு, 

“முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூர்ந்தும் அதில் உயிர்தப்பியோரின் வலிகளுக்கு மரியாதை செலுத்தியும் நினைவுரையை வழங்குகின்றேன். 

இலங்கை விடயத்தில் பரிகார நீதி நடவடிக்கைகள் சர்வதேச குற்றங்களுக்கு உட்பட்டதாகவோ அன்றி தேசங்களுக்கு உட்பட்டவையாகவோ எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திச் செய்யப்படுகின்றபோதுதான் அது உண்மையான பொறுப்புக்கூறலாக அமைய முடியும். 

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மானிடப் பேரவலத்தின் நினைவுகளாக நம்மிடையே உள்ளது. நினைவுகளை மறுத்துவிட்டு ஒருபோதும் உண்மையைப் பரிசோதித்துவிட முடியாது. கடந்த காலத்து நினைவுகளை மீட்டுவது நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையைக் கொண்டுவர உதவுவதாக இருக்கின்றது. 

முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இதுபோன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத, அதில் முழுமையான ஈடுபாடு காட்டாத அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாக்குவதை நாங்கள் கண்டுள்ளோம். 

அவ்வாறு ஓர் அரசு செயற்பட்டு  தன்னுடைய பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால், அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். 

ஆனால், எந்த மண்ணில் கொடுமைகள் நிகழ்ந்தனவோ அந்த நாட்டின் அரசு என்ற வகையில் இலங்கையைத் தள்ளிவைத்து விட்டுப் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுத்துச் சென்றுவிடவும் முடியாது என்பதிலும் கரிசனை கொள்ளவேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் நிலைமைகளுக்குப் பின்னர் அதனையொரு காரணமாகப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் இருந்து இலங்கை அரசு மேலும் பின்வாங்குகின்ற சூழல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டியும் உள்ளது.

தற்போதைய ஆட்சியில் இலங்கை ஒரு பாரதூரமான நிலைமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்கி அதன் நடவடிக்கைகளை “முரண்பாடுகளுக்கான விதைகளைத் தூவுதல்” என்று தலைப்பிட்டு கடிதம் ஒன்றை முன்னாள் ஐ.நா.செயலாளர்களுடன் இணைந்து வெளியிட்டிருக்கின்றேன். 

இலங்கையில் வரவிருக்கும் பேராபத்தை அங்குள்ள தற்போதைய நிலைமைகள் முன்கூட்டியே உணர்த்துகின்றன. ஜனநாயகத்துக்கான இடைவெளி சுருங்கி வருகின்றது என்ற எச்சரிக்கையை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்ததேன்” என்றார். 

(சட்ட நிபுணர் அடமா டியங்க், செனகல் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். 

செனகலில் நீதி மற்றும் சட்டத் துறைகளில் நீண்ட காலம் பதவிகளை வகித்து வந்த அவர் 2001ஆம் ஆண்டு முதல் ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் பதிவாளராக இருக்கிறார்.

 அத்துடன் சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழுவிலும் நீண்டகாலம் செயற்பட்டவர். 1995 முதல் 2000 வரை ஹெய்ட்டி நாட்டுக்கான ஜக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.)

இதையும் படிங்க

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

ஆப்கான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் கொரோனா தொற்றால் காலமானார்

'த கபிட்டல் மகாராஜா' குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார். கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக...

சர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது

பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புச் செய்திகள்

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்,...

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…!

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள்...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது.

நான்கல்ல நாற்பது திருமணமும் செய்வேன்! – வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா,...

மேலும் பதிவுகள்

ஜேர்மன் வெள்ளத்தால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 156 ஆக உயர்வு

ஜேர்மனியில் தொடரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் தொகை 156 ஆக அதிகரித்துள்ளதாக பில்ட் பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை இலங்கை விரைவுபடுத்தியுள்ளது: சீனத்தூதரகம் பாராட்டு

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை இலங்கை மிகவும் விரைவுபடுத்தியிருப்பதாகப் பாராட்டியிருக்கும் சீனத்தூதரகம், எதிர்வரும் 2 - 3 வாரங்களில் மேலும்...

இட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம்...

ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகைத தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகன்றது.  இதில் எவருக்கேனும்...

அறிமுக போட்டியிலேயே இஷான் கிஷனின் தனித்துவமான சாதனை

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போது இஷான் கிஷன் அதிக ஈடுபாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

சொந்த மண்ணில் 9 ஆண்டுகளின் பின் இந்தியாவை வெற்றி கொண்டது இலங்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வெல்த்  லூயிஸ் முறையில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் 9...

பிந்திய செய்திகள்

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்,...

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…!

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க...

செட்டி நாட்டு அவியல்!

தேவையானவை:கத்தரிக்காய் - 100 கிராம்,உருளைக்கிழங்கு - 2,வெங்காயம்,தக்காளி - தலா 1,பட்டை - சிறிய துண்டு,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவைக்கு. அரைக்க:தேங்காய்த்துருவல் -...

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

துயர் பகிர்வு