செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் காட்டுத்தீயால் 93 பேர் பலி

அமெரிக்காவில் காட்டுத்தீயால் 93 பேர் பலி

1 minutes read

அமெரிக்க மாகாணங்களுள் ஒன்றான ஹவாய் தீவுக்கூட்டங்களின் 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது.

இந்த தீவில் உள்ள ஹலைனா பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ மளமளவென நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது.

தீவு பகுதி என்பதால் அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டு இருந்தன. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கு தீப்பிடித்து எரிந்தன.

இதனால் ஏராளமானோர் அங்கு வீடுகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் சூழல் உருவானது. மேலும் சுமார் 30 செல்போன் கோபுரங்கள் எரிந்ததால் அங்கு தகவல் தொடர்புகளும் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையே அங்கு சுற்றுலா சென்றிருந்த பலர் செய்வதறியாது திகைத்து விமான நிலையம் சென்றனர். ஆனால் கரும்புகை சூழ்ந்துள்ளதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் விமான நிலையத்திலேயே அவர்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் சிலர் காட்டுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக கடலில் குதித்தனர்.

ஹவாய் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவாக இது கருதப்படுகிறது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீட்பு படையினருக்கு உதவ உடனடியாக அங்கு ராணுவத்தை அனுப்பினார்.

அவர்கள் தீ விபத்தில் சிக்கிய சுமார் 12 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 93 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

https://twitter.com/Mahmood88239370/status/1690071507442221057?s=20

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.