December 7, 2023 11:04 am

வீடு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் அலெகெனி பகுதியில் உள்ள ஒரு வீடு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சாரம் மற்றும் கியாஸ் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

எனினும் இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்