October 2, 2023 8:56 am

உரிமை கேட்டால் இந்தியாவுக்கு விரட்டியடிப்போம்! – தமிழர்களுக்கு மேர்வின் மிரட்டல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் அல்ல. இது சிங்களவர்களின் பூர்வீக தாயகம். இந்நாட்டில் தமிழர்களுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல.”

– இவ்வாறு மீண்டுமொரு சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

அவர் மேலும் கூறுகையில்,

“வந்தேறு குடிகளான தமிழர்கள், இலங்கையில் எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாட முடியாது. இந்தியாவிலிருந்து இலங்கை வந்த தமிழர்கள், இங்குள்ள இடங்களைச் சொந்தம் கொண்டாடினால் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்படுவார்கள்.

வடக்கு – கிழக்கை “தமிழீழம்” என்று பிரபாகரன் சொந்தம் கொண்டாட முயன்றார். இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதைத் தமிழர்கள் மனதில் வைத்திருந்தால் சரி. இல்லையேல் அவர்களுக்குச் சிங்களவர்கள் செயலில்தான் பாடம் கற்பிக்க வேண்டி வரும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்