September 25, 2023 7:39 am

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 50 பேர் பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 மாடி கட்டிடத்தின், பார்க்கிங் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப்படையினர் 70 பேரை மீட்டனர். அவர்களில் 54 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம், குறுகிய தெருவில் அமைந்துள்ளதால், தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மிகவும் குறுகிய தெருவில் கட்டிடம் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதுடன், இதனால் உயிர்ப்பலி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்