September 22, 2023 7:01 am

அமெரிக்காவில் மாயமான அதிநவீன போர் விமானம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அதிநவீன போர் விமானம்

உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள அமெரிக்காவில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது.

இந்த நிலையில், 80 மில்லியன் டொலர் மதிப்பிலான எப்.35 ரக விமானம் தென் கரோலினா கடலோர பகுதியில் பயணித்தது.

திடீரென அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அதனையடுத்து, அந்த போர் விமானம் எங்கே சென்றது என தெரியவில்லை. அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் விமானத்தின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது. அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்