December 10, 2023 4:17 pm

நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மலை நகரமான கொடைக்கானலில் தொடங்கி இருக்கிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இணையதள நட்சத்திர நடிகரான டியூடு விக்கி என்பவரது இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. இதில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இவருடன் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.

‘கோலமாவு கோகிலா’, ‘ஐரா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவும், நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமான ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ஒரு பீரியட் ஃபிலிமாக தயாராகிறது என்பதால் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்