Tuesday, March 2, 2021

இதையும் படிங்க

நைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு

வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஜம்பாராவில் உள்ள ஒரு உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 300 சிறுமிகளை கடத்தல்காரர்கள் பாதுகாப்பாக விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் உறுதிபடுத்தியுள்ளதாக அல் ஜசீரா செய்தி...

அமெரிக்க, தாய்வானின் வலுவான உறவும் சீனாவின் போர் எச்சரிக்கையும்

அமெரிக்காவும் தாய்வானும் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு வருவதால், சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு சுதந்திரத்தை விரும்பும் மக்களை எச்சரித்துள்ளது. மேலும் “தாய்வான் சுதந்திரம்” தேடுவது என்பது...

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது!

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம்...

சொந்த மண்ணில் மே.தீவுகளை வீழ்த்துமா இலங்கை?

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஆண்டிகுவா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி...

புதிய கட்சி துவக்கம்?: டிரம்ப் திடீர் அறிவிப்பு!

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது...

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி...

ஆசிரியர்

பிரிஸ்போனில் இந்தியாவின் வரலாற்று வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தக்க வைத்துக் கொண்டது.

இந் நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதவில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்போன் மைதானத்தில் 32 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியா வீழ்த்தப்படுவது இதுவே முதன் முறையாகும். குறித்த மைதானத்தில் அவுஸ்திரேலிய அணி 1988 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகளுடனான போட்டியில் தோல்வி கண்டது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியமான டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

இதில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 369 ஓட்டங்களையும், இந்தியா 336 ஓட்டங்களையும் எடுத்தது. 

33 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

டேவிட் வோர்னர் 20 ஓட்டத்துடனும், மார்கஸ் ஹாரிஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் நான்காவது நாளான நேற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் துரிதமான ஓட்டக் குவிப்பில் கவனம் செலுத்தினர். 

குறிப்பாக நடராஜனின் ஓவரில் ஹாரிஸ் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். அதனால் 11.2 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 50 ஓட்டங்களை பெற்றது. அதன் பிறகு இந்திய பந்து வீச்சாளர்களது பந்துப் பரிமாற்றமானது இறுக்கமாக இருந்தது.

89 ஓட்டங்கள் குவித்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட் ஷர்துல் தாகூரினால் தகர்த்தெறியப்பட்டது.

அவரது பந்து வீச்சில் ஹாரிஸ் 38 ஓட்டத்துடன் விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்திடம்  பிடிகொடுத்தார். அடுத்த ஓவரில் வொஷிங்டன் சுந்தரின் சுழலில் டேவிட் வார்னர் 6 பவுண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மார்னஸ் லபுஸ்சேனும், ஸ்டீவ் சுமித்தும் அதிரடி காட்டினர். 

எனினும் லபுஸ்சேன் 25 ஓட்டங்களுடன் மொஹமட் சிராஜின் பந்துப் பரிமாற்றத்தில் ரோகித் சர்மாவிடம் பிடிகொடுத்தார். அதன் பிறகு அந்த அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட் சரிந்த வண்ணம் இருந்தது. 

ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு அவுஸ்திரேலிய அணி 243 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. 

மழை ஓய்ந்ததும் தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய 75.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸுக்காக 294 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் சிராஜ் 5 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 328 ஓட்டம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அந்த வெற்றியிலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 1.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி நான்கு ஓட்டங்களை எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. அத்துடனேயே நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

இந் நிலையில் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் ஆரம்பிக்க ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வர ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்துப் பரிமாற்றத்தில் இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அதன்படி ரோகித் சர்மா 7 ஓட்டங்களுடன் பேட் கம்மின்ஸின் பந்துப் பரிமாற்றத்தில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் டீம் பெய்னிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக புஜரா களமிறங்கிய துடுப்பெடுத்தாட இந்திய அணி மதியநேர உணவு இடைவேளைக்கு முன்னர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களை எத்திருந்தது.

சுப்மான் கில் 64 ஓட்டத்துடனும், புஜாரா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் சுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 91 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவர் நாதன் லியோன்னின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனால் இந்திய அணியின் இரண்டாவது விக்கெட் 132 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 

நான்காவது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷாத் பந்த் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடினார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதன்போது இந்தியாவின் வெற்றிக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் மிச்சம் இருக்க குறைந்தது 37 ஓவருக்கு 145 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தது.

தேனீர் இடைவேளையின் பின்னர் ரிஷாத் பந்த் மற்றும் புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷாத் பந்த் 100 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால் ஒன்பது ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற ரிஷாத் பந்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இறுதி 8 ஓவரில் 50 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தபோது, அகர்வாலின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய வொஷிங்டன் சுந்தர், கம்மின்ஸின் பந்து வீச்சில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசி நம்பிக்கை அளித்தார்.

எனினும் இக்கட்டான நிலையில் வோஷிங்டன் சுந்தரும் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சர்துல் தாகூர் களமிறங்கினார்.

நான்கு ஓவர்களுக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி 97 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களை பெற்று, அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் ரிஷாத் பந்த் 89 ஓட்டங்களுடனும், நவ்தீப் ஷைனி எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ரிஷாத் பந்தும், தொடரின் நாயகனாக பேட் கம்மின்ஸும் தெரிவானார்கள்.

இதையும் படிங்க

‘கமட பிட்டியக்’ தேசிய திட்டம் அறிமுகம்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் 'கமட பிட்டியக்' தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  இதன் அங்கூரார்ப்பண...

திரிமான்ன, தனஞ்சயவின் அடுத்த கட்ட நடவடிக்கை

இடது கை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவும் சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டிசில்வாவும் மார்ச் 07 ஆம் திகதிக்குள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஏனைய இலங்கை அணி...

‘ஊய்குர் முஸ்லிம்கள்’ பற்றிய கதையாடல்களுக்கு சமூக ஊடகங்களில் சீனா விதிப்பு

சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்களுக்கு எதிராக நடந்து வரும் மனித உரிமை மீறல் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக சார்பு போராட்டங்கள் போன்ற விடயங்களை மையப்படுத்திய அரசியல் தலைப்புகளைப் பற்றி...

வட தீவுகளில் சீன மின்தட்ட விவகாரம் | அமைச்சரவை தீர்மானங்களை மாற்ற முடியாது | அரசாங்கம்

அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது. யாழ். தீவுகளில் சீன மின் உற்பத்தி...

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை கிளிநொச்சியில் புதைக்க எதிர்ப்பு!

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி மக்கள் நாளை...

உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்றைய தினம் கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு

வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஜம்பாராவில் உள்ள ஒரு உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 300 சிறுமிகளை கடத்தல்காரர்கள் பாதுகாப்பாக விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் உறுதிபடுத்தியுள்ளதாக அல் ஜசீரா செய்தி...

அமெரிக்க, தாய்வானின் வலுவான உறவும் சீனாவின் போர் எச்சரிக்கையும்

அமெரிக்காவும் தாய்வானும் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு வருவதால், சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு சுதந்திரத்தை விரும்பும் மக்களை எச்சரித்துள்ளது. மேலும் “தாய்வான் சுதந்திரம்” தேடுவது என்பது...

மர ஆட்சி | முல்லை அமுதன் கவிதை

எங்களின் வளவில் தான்எல்லாம் வளர்ந்தன..புல்லாகியும்,மரமாகியும்எங்களுக்காகமரம்வளைந்து கொடுத்துஇளமையை ஆராதித்ததும்சில காலம்தான்.என் காதலுக்கு இசைந்து கொடுத்தது புற்கள்.காலம் அனைத்தையும் உருமாற்றியது.மரம் அனைவரின் ஆசிர்வாததுடனும்அரியணையேறியது.எங்களின்ரகசியங்களைத் தெரிந்த மரம்புற்களைத்...

மேலும் பதிவுகள்

மலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்

மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...

சாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டரின் இன்று...

மீனவர்களை காவுகொண்ட விபத்து | சோகத்தில் மூழ்கிய மாளிகைக்காடு !

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு கடற்கரை முழுவதிலும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு