செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இட மாற்றம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இட மாற்றம்

1 minutes read

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் 2022 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தத் தொடரை இலங்கை உத்தியோகபூர்வமாக நடத்த ஏற்பாடாகி இருந்தபோதும், அதனை டுபாய் மற்றும் ஷார்ஜாவுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை கவலை அளிக்கும் நிலையில், ஆசிய கிரிக்கெட் கெளன்சிலின் அண்மைய கூட்டம் ஒன்றில் இது பற்றிய முடிவு எடுக்கப்பட்டதாக அது பற்றித் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை அண்மையில் அவுஸ்திரேலியாவுடன் முழுமையாக தொடர் ஒன்றை வெற்றிகரமாக நடத்தியதோடு, தற்போது பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடர் ஒன்றை நடத்தி வருகிறது.

எனினும் டி20 வடிவில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரில் மொத்தம் ஒன்பது அணிகளை இலங்கை வரவேற்க வேண்டி உள்ளது.

“இரு அணிகளை நடத்துவதைப் போன்றதல்ல பத்து அணிகளை நடத்துவது” என்று இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா “கிரிக்கின்போ” இணையதளத்திற்கு குறிப்பிட்டார்.

ஆசிய கிண்ண போட்டி அட்டவணை ஜூலை 22 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இதில் லீக் மட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு முறை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளினதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இலங்கை வர எதிர்பார்க்கின்றபோதும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் ரசிகர்களின் வருகையில் சந்தேகம் இருப்பதாக சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கிண்ணத்தின் பிரதான தொடர் வரும் ஓகஸ்ட் 27 தொடக்கம் செப்டெம்பர் 11 வரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் 2022 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தத் தொடரை இலங்கை உத்தியோகபூர்வமாக நடத்த ஏற்பாடாகி இருந்தபோதும், அதனை டுபாய் மற்றும் ஷார்ஜாவுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.