செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மஹேலவுக்கு மும்பை இந்தியன்ஸில் புதிய பதவி !

மஹேலவுக்கு மும்பை இந்தியன்ஸில் புதிய பதவி !

0 minutes read

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவருமான மஹேல ஜயவர்தன இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றி வந்த நிலையில் அப்பதவியில் இருந்து விலகுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மஹேல ஜெயவர்தனவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் பாரம்பரியத்தை உலகளாவிய ரீதியில் உருவாக்கும் நோக்கத்துடன் அதன் நிர்வாகமானது மஹேல ஜெயவர்த்தனே மற்றும் சகீர் கான் ஆகிய இருவரையும் புதிய பொறுப்புக்களை ஏற்குமாறு கேட்டுக்கொண்டுள்ள நிலையிலேயே மஹேல ஜெயவர்தன தலைமைப் பயிற்சியாளர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், மஹேல ஜெயவர்த்தன 3 அணிகளின் தலைமை செயல்திறன் அதிகாரியாகவும் சகீர் ஹான் கிரிக்கெட் மேம்பாட்டுத் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்படவுள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.