Wednesday, December 2, 2020

இதையும் படிங்க

மாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! 9 வயது சிறுமி பரிதாபமாக பலி

பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது!

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...

மஹர சிறைச்சாலை மோதல் –உயிரிழப்புமற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக...

வடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்

வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...

ஆசிரியர்

“அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா?” வேதனையில் ஈழத் தமிழர்கள்

வேதனையில் வெம்பும் முகாம் தமிழர்கள்!

ந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது.

திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன், யோகேஸ் வரன் உள்ளிட்ட 65 இலங்கைத் தமிழர்கள், இந்திய குடியுரிமை வழங்கக்கோரி கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய போதுதான் நீதிபதி இப்படிச் சொன்னார்.

இந்த வழக்கில், ‘16 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, அதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் ஈழத்தமிழர்கள். “அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா?”

திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமுக்குச் சென்றோம். அடையாளத்தை மறைத்துக்கொண்டு நம்மிடம் பேசிய ஈழத்தமிழர் ஒருவர், ‘‘ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்திலிருந்து லட்சக் கணக்கான தமிழர்களை, தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்படிக் குடியேறிய தமிழர்களை, இலங்கை விடுதலை அடைந்த பிறகு திருப்பி அனுப்பிட அந்நாட்டு அரசு முடிவெடுத் தது. 1964-ல் இந்திய அரசும் இலங்கையும் ஏற்படுத் திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்கள். பாதி பேர், திரும்பிவர மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

கடந்த 1983-ம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் போர் காரணமாக, தமிழர் கள் பலர் உயிரைப் பாதுகாத்திட நினைத்து, கடல் மார்க்கமாக குடும்பத்தோடு இந்தியா வந்தோம். எங்களைச் சிறப்பு முகாம்களில் தங்க வைத்தனர். இங்கு வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னமும் அகதிகளாகவே உள்ளோம். நாங்கள் அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே சாக வேண்டுமா?தமிழகன்

நாங்களும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்தான். வயிற்றுப்பிழைப் புக்காக எங்கள் முன்னோர் தோட்ட வேலைக்குச் சென்று அங்கு குடியேறி னார்கள். அதைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இந்தக் கோரிக் கையை வலியுறுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்திவருகிறோம்.

இதுவரை வழக்கை இழுத்தடித்த தமிழக அரசு, நாங்கள் சட்ட பூர்வ மாக இந்தியா வரவில்லை என்றும், அதனால் எங்களுக்குக் குடியுரிமை பெறத் தகுதியில்லை என்றும் நீதி மன்றத்தில் கூறியது. இங்கே வந்து 36 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் வசிக்கும் எங்களை, வாழ்நாள் முழுக்க அகதிகளாகவே வைத்திருக்க நினைக்கிறார்கள்போல.

எங்கள் வலிகளையும் வேதனை களையும் புரிந்துகொண்ட நீதிபதி, இந்திய குடியுரிமை பெற புதிய விண் ணப்பம் வழங்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பி, 16 வாரங்களில் நடவடிக்கை எடுத்து குடியுரிமை வழங்கிட வேண்டும் என்றும், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட் டார். இதன் பிறகாவது எங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் வருமா எனக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

தாயகம் திரும்பியோர் வாழ் வுரிமை இயக்கத்தின் மாநில அமைப் பாளர் வழக்கறிஞர் தமிழகன், ‘‘தமிழகத்தில் 115 அகதிகள் முகாம்கள் இருக்கின்றன; 1,05,043 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். முகாம்களில் 73,241 பேரும், வெளியில் 31,802 பேரும் உள்ளனர். தற்போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள்

முகாம்வாசிகளில் உயர்கல்விக்குச் செல்வோர் எண்ணிக்கை மிகக்குறைவு. இவர்களால் வீடோ நிலமோ வாங்க முடியாது. வெளியூர் சென்று சில நாள்கள் தங்க முடியாது. அந்தளவுக்குக் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருக்கிறது.

இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு, பிறப்பின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்பது விதி. ஆனால், இந்திய அரசு அவர் களை இந்தியக் குடிமக்களாக ஏற்கவில்லை. அவர்களையும் அகதிகளாக்குகிறார்கள்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு தமிழர். அவர் வெளியுறவுத்துறையில் பணி யாற்றியதால், இலங்கையில் நடந்த விவகாரங்கள் குறித்தும் போரின் துயரங்கள் குறித்தும் முழுமையாக அறிவார். ஆகை யால், 36 வருடங்களாகக் குடியுரிமைக் கேட்டுப் போராடும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவுபடி, அனைத்து அகதிகள் முகாம்களுக்கும் அரசு அதிகாரிகளை அனுப்பி, உரிமை கோரும் விண்ணப்பங்களை அரசு தரவேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இதற்காகச் சிறப்பு பிரிவு ஏற்படுத்தி, பெறப்படும் விண்ணப்பங்களை விரைவாக மத்திய அரசுக்கு அனுப்பி குடியுரிமை கிடைக்க வழி செய்ய வேண்டும்’’ என்றார்.

மத்திய அரசு மனது வைக்குமா?

 

இதையும் படிங்க

தொடர் வெற்றியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் Kandy Tuskers அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம்...

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...

கமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு!

சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...

தீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...

தொடர்புச் செய்திகள்

சித்தப்பாவின் தலையுடன் பொலிஸ் நிலையம் வந்த மகன்மார்

தமிழகத்தில் சித்தப்பாவின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மகன்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கையின் புதுவயல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் யூசுப் ரகுமான்(வயது 45), இறைச்சி கடை...

ஆவியாகி பழிவாங்குவேன் சிவனடியார்

தமிழகத்தில் சிவனடியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதற்கு காரணமான காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தை என் ஆத்மா பழிவாங்காமல் விடாது என அவர் வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 110 பேர் ஒரு நாளில் கொரோனாவால் மரணம்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...

மாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! 9 வயது சிறுமி பரிதாபமாக பலி

பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் பதிவுகள்

வயிற்றை ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியா - விஜயாப்புராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து டாக்டர்கள் தைத்து உள்ளனர். அந்த துணி தற்போது 6 மாதங்களுக்கு பிறகு...

மோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...

யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் காலி க்ளேடியேடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம்...

கன்னிராசி திரைப்படத்தை வெளியிட தடை

நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வளர்ப்பு நாயால் காயமடைந்த ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு...

Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட்!

Lanka Premier League (LPL) போட்டிகளில் பங்குபற்றும் Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன்...

பிந்திய செய்திகள்

தொடர் வெற்றியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் Kandy Tuskers அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம்...

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

பிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு!

பிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...

பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...

துயர் பகிர்வு