Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை அமெரிக்கா- ரஷ்யா பிணைக் கைதிகள் பரிமாற்றம் | நல்லொண்ணசமிக்ஞையா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

அமெரிக்கா- ரஷ்யா பிணைக் கைதிகள் பரிமாற்றம் | நல்லொண்ணசமிக்ஞையா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

7 minutes read

அமெரிக்கா- ரஷ்யா பிணைக் கைதிகள் பரிமாற்றம்:

உக்ரேனிய போரின் பின்னர் 

நல்லொண்ணசமிக்ஞையா ?

இரு வல்லரசுகளும் பேச்சுவார்த்தை செல்ல சாத்தியமா?

——————————————————

 கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா

வல்லரசுகளின் இரு நாட்டு தலைவர்களான விளாடிமிர் புடின் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவருக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜெனீவா உச்சிமாநாட்டிலிருந்தே பிணைக் கைதிகளை பரிமாறி கொள்ளுவது தொடர்பான பேச்சுவார்த்தை முதலில் நடைபெற்றது.

இதன் பின் கடந்த வாரம் அமெரிக்கா- ரஷ்யா பிணைக் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்தது. இந்நிகழ்வு உக்ரேனிய போரின் பின்னர் நல்லொண்ண சமிக்ஞையை வெளிக்காட்டி உள்ளதா என்றும் ஊகிக்கலாம்.

அமெரிக்கா- ரஷ்யா இடையே உக்ரேனிய போருக்கு முன்னராகவும், பின்னராகவும் உருவாகிய பகைமை சற்றும் தணியாத வேளையில், தற்போதய கைதிகள் பரிமாற்ற இந்நிகழ்வானது இரு வல்லரசுகளும் நட்புறவு பேச்சுவார்த்தை செல்ல சாத்தியமா என்றும் கருத இடமுண்டு.

பிணைக் கைதிகள் பரிமாற்றம் குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை அழைப்பதற்கான நேரத்தை ரஷ்யா விரைவில் முன்மொழியும் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் முன்பு தெரிவித்து இருந்தார்.

உக்ரேனியபோரின்பின்னர்நல்லொண்ணசமிக்ஞை :

உக்ரேனிய போரின் பின்னர், நல்லொண்ண சமிக்ஞையாக இது தொடர்பாக விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை அழைப்பதற்கான நேரம் தயாராகி வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் அமெரிக்க சிறையில் உள்ள கைதிகள் பிரிமாற்றம் குறித்து விவாதிக்க விரும்புவதாக ஆண்டனி பிளிங்கனும் தெரிவித்தார்.

ரஷ்ய சிறையில் உள்ள அமெரிக்க கூடைப் பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனர் மற்றும் முன்னாள் கடற்படை வீரர் பால் வீலன் ஆகியோரை விடுவிக்க அமெரிக்க கணிசமான வாய்ப்பை வழங்குவது குறித்தும் பிளிங்கன் கருத்து தெரிவித்தார்.

அத்தகைய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் சிறையில் இருக்கும் ஆயுதக் வியாபாரி விக்டர் பௌட்டை பரிமாறிக் கொள்ள வாஷிங்டன் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

விளையாட்டுவீராங்கனைபிரிட்னி

இதற்கமைய கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றமாக அமெரிக்க விளையாட்டு வீராங்கனை பிரிட்னியை விடுவித்தது ரஷ்யா. 31  வயதான பிரிட்னி கிறைனர் அமெரிக்காவின் மிகப் பிரலமான கூடைப்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவர். 2 தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றவர்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ரஷ்யாவால் சிறைத் தண்டனை பெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போது நாடு திரும்பியுள்ளார்.

அமெரிக்க கூடைபந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் கடந்த பிப்ரவரி மாதம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா சென்றபோது, அவரிடம் நடத்திய சோதனையில் சட்டவிரோத போதைப் பொருட்கள் கைபற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரிட்னி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் பிரிட்னிக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரிட்னி கிறைனர்ரஷ்யசிறையில் :

அமெரிக்காவின் பிரிட்னி கிறைனர் (Brittney Griner,) 2016, 2020 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். ஒலிம்பிக் போட்டி, அமெரிக்க தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கத்தின் சம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச கூடைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் போட்டி, மகளிர் கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் போட்டி போன்ற அனைத்து முக்கிய போட்டிகளிலும் முதலிடம் பெற்ற 11 வீராங்கனைகளில் ஒருவர் பிரிட்னி கிறைனர்.

கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கு அவர் சென்றபோது அவரின் பயணப் பையில், ஹாஷ் ஒயில் எனும் கஞ்சா எண்ணெய் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இது ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட பொருளென்பதால் பிரிட்னி கிறைனர் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தன்னை குற்றவாளி என அவர் கடந்த ஜூலையில் ஒப்புக்கொண்டார். எனினும், சட்டங்களை மீறும் எண்ணம் தனக்கு இல்லை எனவும், அப்பொருள் தனது பயணப்பைக்குள் வந்தமை தற்செயலானது எனவும் அவர் கூறினார்.

ஒருபாலின சேர்க்கையாளரான பிரிட்னி கிறைனர், தனது சக கூடைப்பந்தாட்ட வீராங்கனையான குளோறி ஜோன்சனை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இரண்டாம் தடவையாக 2019 ஆம் ஆண்டு சார்ளி வட்சன் எனும் பெண்ணை பிரிட்னி கிறைனர் திருமணம் செய்துகொண்டார். 2019 ஆம் ஆண்டு சார்ளி வட்சன்  தனது பெயரை சார்ளி அப்பெண் கிறைனர் என  மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவினால் பிரிட்னி கிறைனர்  விடுவிக்கப்பட்ட பின்,

அமெரிக்காவினால் விடுவிக்கப்பட்ட விக்டர் பௌட்  ரஷ்யாவை சென்றடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலஆயுதமுகவர்விக்டர்பௌட் :

பிரபல ஆயுத முகவரான 52 வயதான விக்டர் பௌட் (Viktor Bout), சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் இராணுவ அதிகாரி ஆவார். ரஷ்ய, போர்த்துகல், பிரெஞ்சு, பாரசீகம், ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.

விக்டர் பௌட் ரஷ்ய இராணுவத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய அவர், 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நடாத்தி வந்தார்.

அவ்விமானங்கள் மூலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்களைக் கடத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு  ஆயுத விற்பனைத் தடைகளை மீறி ஆயுதங்களை விநியோகித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இண்டர்போல் அறிவித்தலையடுத்து, 2008 ஆம் ஆண்டு தாய்லாந்து வைத்து பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் அந்நாட்டு பொலிஸாரால் விக்டர் பௌட் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார்.  அவரின் கைது சட்டவிரோதமானது என ரஷ்யா கூறியது.

அமெரிக்க பொதுமக்களையும், அதிகாரிகளையும் கொல்வதற்கு சதி செய்தமை, பயங்கரவாத அமைப்புக்கு உதவி வழங்கியமை முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. 2011 ஆம் ஆண்டு அவர் குற்றவாளியாக காணப்பட்டதுடன், 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் இலினோய்ஸ் மாநிலத்திலுள்ள சிறையொன்றில் விக்டர் பௌட் அடைக்கப்பட்டிருந்தார்.

நீண்ட ராஜதந்திர தொடர்புகளின் பின்னர், 12 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ஆயுத வியாபாரி விக்டர் போட் என்பவரை ரஷ்யாவிடம் ஒப்படைத்தால், சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று ரஷ்யாவால் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரிட்னி கிரைனரை விடுதலை செய்ய ரஷ்யா சம்மதம் தெரிவித்தது. ரஷ்யாவின் நிபந்தனையை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து சிறைக் கைதிகள் இருவரையும் தற்போது ரஷ்யா – அமெரிக்கா பரிமாறிக் கொண்டுள்ளன.

அதே வேளை பிரிட்டனி கிறைனரை விடுவிப்பதற்காக, 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதத் தரகர் விக்டர் பௌட்டை அமெரிக்கா விடுவிக்க ஒப்புக்்கொள்ளப்பட்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலுள்ள விமான நிலையத்தில் வைத்து கடந்த வாரம் வியாழக்கிழமை (08/12/22) வைத்து இக்கைதிகள் பரிமாற்றம் நடந்தது.

நாடுதிரும்பியவுடன் (LDPR) அரசியல்கட்சியில்இணைவு:

கடந்த வாரம் ரஷ்யாவுக்குத் திரும்பிய பிரபல ஆயுத முகவர் விக்டர் பௌட், கிரெம்ளின் சார்பு லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDPR) அரசியல் கட்சியில் சேர்ந்து ஜனாதிபதி விளாடிமிர் புடினை வாழ்த்தியுள்ளார்.

திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு டெலிகிராம் வீடியோவில், கிரெம்ளின் சார்பு லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDPR) தலைவரான லியோனிட் ஸ்லட்ஸ்கி, பௌட்டை கட்சியில்

வரவேற்று, இன்றைய ரஷ்யாவின் தேசிய – தார்மீக அடித்தளங்களுக்கான கொள்கைகளுக்கான போராட்டத்தின் அடையாளமாக மாறிய ஒரு தைரியமான மனிதர்” என்று ஸ்லட்ஸ்கி கூறினார்.

கடந்த வாரம் அவர் மாஸ்கோவிற்கு வந்ததைத் தொடர்ந்து, பௌட் கிரெம்ளின் சார்பு RT செய்திக்கு ஒரு நேர்காணலுக்கு அமர்ந்தார், முன்னாள் உளவாளியாக மாறிய பத்திரிகையாளர் மரியா புட்டினாவிடம், தான் புடினுக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனாதிபதியின் புகைப்படத்தை நடுத்தர பாதுகாப்பு சிறையில் தனது அறையில் வைத்திருந்ததாகவும் கூறினார்.

“நான் ஒரு ரஷ்ய நபர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன், புடின் எங்கள் ஜனாதிபதி” என்று புட்டினாவிடம் பௌட் கூறினார். விக்டர் போட் உக்ரைனில் நடந்த போரை பற்றி கூறுகையில் “நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எனக்குத் தெரியும்.” எனக் கூறினார்.

56 வயதான போட், அமெரிக்க மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ரஷ்யா திரும்பிய சில நாட்களில் LDPR இல் சேர்ந்தார். ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையுடன் தொடர்புகளைக் கொண்ட ஓய்வுபெற்ற சோவியத் விமானப்படை விமானியான போட், தனக்கு “தேவையான திறன்கள்” இருந்தால், முன்வரிசையில் போராட வருவேன் என்று கூறினார்.

அமெரிக்ககடற்படைஅதிகாரிபோல்வெலன்விடுவிக்கப்படவில்லை:

ஆயினும் ரஷ்ய சிறையிலிருந்து பிரிட்னி கிறைனரையும் முன்னாள் கடற்படை அதிகாரி போல் வெலனையும் கைதிகள் பரிமாற்ற முறையில் விடுவிக்க அமெரிக்க முயற்சித்தது.  

52 வயதான போல் வெலன்  2018 டிசெம்பரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். போல் வெலனுக்கு 16 வருட சிறைத்தண்டனை விதித்து 2020 ஆம் ஆண்டு ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், கடந்த வார கைதிப் பரிமாற்றத்தில் போல் வெலன் விடுவிக்கப்படவில்லை.

மீண்டும்நட்புறவுபேச்சுவார்த்தை:

அமெரிக்கா- ரஷ்யா இடையே உக்ரேனிய போருக்கு முன்னராகவும், பின்னராகவும் உருவாகிய பகைமை சற்றும் தணியாத வேளையில்,

கடந்த வார பிணைக் கைதிகள் பரிமாற்றம் நிகழ்வானது சர்வதேச ராஜதந்திர வட்டாரத்தில் பாரிய கவனத்தை பெற்றுள்ளது.

உக்ரேனிய போரின் பின்னர் நல்லொண்ண சமிக்ஞையை வெளிக்காட்டி இருக்கும் இக்

கைதிகள் பரிமாற்ற இந்நிகழ்வானது இரு வல்லரசுகளும் மீண்டும் நட்புறவு பேச்சுவார்த்தை செல்ல சாத்தியங்கள் உள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More