Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை சார்ந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை என்ன?

கொரோனா எதிரொலி காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால், ஆஸ்திரேலியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்கள் மட்டுமின்றி பயணத்தடையினால் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பயணத்தடையால், தற்காலிக...

50க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது

ஆஸ்திரேலியாவில் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 50க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னிக்கு அருகே ஸ்மீட்டன் கிரேன்ஜில் (Smeaton Grange) என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள்...

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா?

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அபிமன்யூ சிங்கின் நீண்ட...

கொரோனா அச்சத்திற்கு இடையில் அகதியை சிறைப்படுத்திய ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் இருந்த குர்து அகதி ஒருவர், தடுப்பு நிலைமைகளை முன்னேற்றும்படி போராட்டம் நடத்தியதற்காக வழக்கமான தடுப்பு மையத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் முயற்சியில் ஈடுபட்ட...

கொரோனா தாக்கம்: ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் அகதிகள்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு, அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் வாழ்வை கடுமையாக பாதித்திருக்கின்றது. அகதிகள் சார்ந்து இயங்கும் தொண்டு அமைப்பிடம் உதவிக்கோரி வரும் தொலைப்பேசி அழைப்புகள் ஆறு மடங்கு...

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் நாடுகடத்தப்படுமா?

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தை நாடுகடத்தவது தொடர்பான வழக்கில், அக்குடும்பத்திற்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. பிரியா, நடேசலிங்கம் ஆகிய இருவரும் இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ் அகதிகள்....

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் கொரோனா தாக்கம் செலுத்துமா?

உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை, சீனா முதல் அமெரிக்கா வரை எதிர்பாராத சூழல்களை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்கம் பல பின்விளைவுகளை உருவாக்கும் எனக்கூறப்படும் நிலையில், தற்போது...

ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அகதிகளுக்கு கொரோனா தாக்கும் அபாயம்?

உலகெங்கும் பெருகிவரும் கொரோனா வைரஸ் மீதான அச்சம், ஆஸ்திரேலிய மக்களிடம் மட்டுமின்றி அந்நாட்டில் உள்ள அகதிகளிடையேயும் பரவியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற பல அகதிகள் உடல்நலம் அல்லது மனநலம் குன்றிய நிலையில் பலவிதமான தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். ஹமித் எனும் ஈரானிய அகதியும் இவ்வாறு தடுப்பில் உள்ளவர்களில் ஒருவர். நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் இருந்த போது, தன்னைத்தானே தீ வைத்துக்கொண்ட நிலையில் அவர் காப்பற்றப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மன ரீதியாக பாதிக்கப்பட்ட ஹமித், இதன் மூலம் உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ தேவையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட, ஓராண்டுக்கு மேலாக மெல்பேர்ன் தடுப்பு முகாமில் இவர் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ‘ஹமித்’ சமூகத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார் இவரது மருத்துவர். “இதுதொடர்பான பரிசீலணைக்கு ஒரு வாரத்திற்கு மேலாகும் என்றனர் அதிகாரிகள். ஆனால் 15 மாதங்கள் கடந்த பின்னரும் ஆஸ்திரேலிய எல்லைப்படை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை,” என்கிறார் ஹமித் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமித்தைப் போல தடுப்பில் உள்ள அகதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய முகாம் காவலாளிக்கு கொரோனா தாக்கம்: அச்சத்தில் அகதிகள்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டல் அகதிகளை வைத்திருக்கும் தற்காலிக இடமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின்...

குர்து அகதியின் பாடல் பதிவை நிறுத்திய ஆஸ்திரேலிய அதிகாரிகள்.

ஆஸ்திரேலிய ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்து அகதியும் இசையமைப்பாளருமான மோஸ்தபா அசிமிடபரின் பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த மோஸ்தபா, மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள்...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -