November 28, 2023 7:24 pm

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பற்றியெரியும் காட்டுத்தீ

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்று காரணமாக பல பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகின்றது.

காட்டுத்தீ நெருக்கடி நிலை காரணமாக அந்தப் பகுதிகளைவிட்டு வெளியேறும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியேறுவதற்குள் நிலைமை மோசமடைந்தால் பாதுகாப்பான இடங்களை நாடிச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதனையடுத்து, டாஸ்மேனியாவின் ஃபிளின்டர்ஸ் தீவில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால் தீயின் சீற்றம் சற்றுக் குறைந்திருத்தாலும் காட்டுத்தீ இன்னமும் எரிகிறது.

விக்டோரியாவின் மெல்பர்ன் நகரில் கிட்டத்தட்ட 170 ஆண்டுகளில் மிகவும் வறண்ட செப்டம்பர் மாதமாகக் கடந்த மாதம் பதிவாகியுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்