June 9, 2023 9:17 am

ஆஸி. பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; இரு துப்பாக்கிகளுடன் சிறுவன் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மேற்கு ஆஸ்திரேலியாவின் டூ ராக்ஸ் பகுதியில் உள்ள பாடசாலை மற்றும் அங்குள்ள கார் பார்க்கிங்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலை கட்டிடங்கள், கார்கள் சேதமடைந்தன. இதுகுறித்து பாடசாலை நிர்வாகம் சார்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் பொலிஸார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் 15 வயது சிறுவன் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதும், அவன் இந்த பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பதும் தெரிய வந்தது.

எனவே, சிறுவனை, பொலிஸார் கைது செய்து அவனிடம் இருந்த 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து சிறுவனிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்