அவுஸ்ரேலியாவுக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது

அவுஸ்ரேலியாவுக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளுக்குச் சென்று, திரும்பி வர முடியாத நிலையிலுள்ள அவுஸ்ரேலியர்களை திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

துகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை வாரத்துக்கு நான்காயிரத்தை கடக்க கூடாது என்று தற்போதுள்ள கட்டுப்பாட்டைத் தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

எனவே, அந்த உச்சவரம்பு தளர்த்தப்படாது. இன்னும் இரு வாரங்களுக்கு பிறகு இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும். அப்போது, வாரந்தோறும் அனுமதிக்கப்படும் வெளிநாட்டுப் பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று நம்புகிறேன்’ என கூறினார்.

அவுஸ்ரேலியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 24,602பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 485பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியர்