காணாமல்போன இந்தியர்கள் சீனா வசம் உள்ளனர்

அருணாச்சலபிரதேசத்தில் காணாமல்போன இந்தியர்கள் ஐவர் தங்கள் பகுதியில் இருப்பதை சீனா உறுதிப்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முறைப்படி அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு சுமை தூக்கிகளாகவும் வழிகாட்டிகளாகவும் பணியாற்றி வந்த 5 பேர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போன நிலையில் சீன இராணுவத்தால் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு சீனா தரப்பில் மறுப்பு தெரிவித்த நிலையில், 5 இந்தியர்களும் தங்கள் பகுதியில் கண்டறியபட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

ஆசிரியர்