கொரோனா தொற்றின் அதிகரிப்பு | மியான்மாறில் கள மருத்துவமனை!

கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக மியான்மார் அதிகாரிகள் யாங்கோனில் ஒரு கள மருத்துவமனையை கட்டி வருகின்றனர்.

சமீபத்திய வாரங்களில் யாங்கோன் பகுதிகளில் அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம், யாங்கோனிலில் பயண கட்டுப்பாடுகளை அரசாங்கம் வித்திருந்ததுடன் இந்த நடவடிக்கைகள் ஓக்டோபர் 1 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மியான்மரில் 307 புதிய நோயாளிகளும் இன்று புதன்கிழமை 134 நோயாளிகளும் பதிவாகியுள்ளது.

அதன்படி நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,636 ஆக பதிவாகியுள்ளன அதேவேளை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கால்பந்து ஆடுகளத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை, 500 படுக்கைகளுக்கு இடமளிக்கும், ஒரு பெரிய பரவலுக்கு இடமளிக்க எங்களுக்கு இடமில்லை. நோயாளிகளை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நிலைமை மோசமடையும், அதனால்தான் நாங்கள் அவசரமாக தங்குமிடங்களை உருவாக்குகிறோம் என புதிய தற்காலிக மருத்துவமனையின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆசிரியர்