Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இஸ்ரேல் – காசா போரில் வெளிப்படையான போர்க்குற்றங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இஸ்ரேல் – காசா போரில் வெளிப்படையான போர்க்குற்றங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

1 minutes read

இஸ்ரேலிய படைகள் மற்றும் பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்கள் 2021 மே மாதம் காசா பகுதி, இஸ்ரேலில் முன்னெடுத்த போரின் போது யுத்த விதிகளை மீறியதாகவும், போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாகவும்  மனித உரிமைகள் கண்காணிப்பகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

File - In this May 13, 2021, file photo, smoke rises following Israeli airstrikes on a building in Gaza City. Human Rights Watch on Tuesday, July 27, 2021, accused the Israeli military of carrying attacks that "apparently amount to war crimes" during an 11-day war against the Hamas militant group in May. (AP Photo/Hatem Moussa, File)

ஹமாஸ் போராளிக் குழுவுக்கு எதிரான 11 நாள் போரின்போது, இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்கள் “வெளிப்படையாக போர்க்குற்றங்கள்” ஆகும்.

62 பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மூன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை விசாரித்த பின்னர் சர்வதேச மனித உரிமை அமைப்பு தனது முடிவுகளை வெளியிட்டது. 

அதேநேரம் இஸ்ரேலிய மக்கள் தொகை மையங்களை நோக்கி 4,360 க்கும் மேற்பட்ட வழிகாட்டப்படாத ரொக்கெட் தாக்குதல்களை பாலஸ்தீனி போராளிகள் முன்னெடுத்ததாகவும் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த அறிக்கை மோதலின்போது இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளி குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து தனி அறிக்கை வெளியிடும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More