சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருடன் எந்த தொடர்புமில்லை | ஈரான்

சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என ஈரான்தெரிவித்துள்ளது.

சல்மான் ருஸ்டி மீது தாக்குதலை மேற்கொண்டவருக்கும் எங்களிற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை முற்றாக நிராகரிக்கின்றோம்,ஈரான் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு எவருக்கும் உரிமையில்லை என ஈரானின் வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் நாசெர் கனானி தெரிவித்துள்ளார்.

சல்மான் ருஸ்டி மற்றும் அவரது ஆதரவாளர்களை தவிர வேறு எவரும் கண்டனத்திற்குரியவர்கள் என நாங்கள் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மதத்தின் புனிதத்தை அவமரியாதை செய்ததன் மூலம் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் ஒன்றரை பில்லியன் முஸ்லீம்களின் பொறுமைகோட்டினை கடந்ததன் மூலம் சல்மான் ருஸ்டி மக்களின் சீற்றத்திற்கு தன்னை ஆளாக்கினார் என ஈரானின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்