Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை | திபெத் மக்களிற்கு மற்றுமொரு அச்சுறுத்தல்

சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை | திபெத் மக்களிற்கு மற்றுமொரு அச்சுறுத்தல்

4 minutes read

1950 களில் திபெத் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து திபெத் மக்கள் ஆறு தசாப்தகாலத்திற்கு மேல்  சீனாவின்கம்யுனிச அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளின் வாழ்ந்துள்ளனர் என்பது உலகிற்கு ஒரு புதிய செய்தியில்லை.

திபெத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் பல வருடங்களாக   விவாதத்திற்குரிய விடயமாக காணப்படுகின்றது.

ஆனால் திபெத் மக்களின் விடுதலை போராட்டம் அது பெறவேண்டிய  உரிய கவனத்தையோ அல்லது நீதியையோ இதுவரை பெறவில்லை.

திபெத்தில் மனித உரிமை விவகாரம் தொடர்ந்து மோசமாகிவருவதுடன் திபெத் மக்கள் மீதான தனது சித்திரவதைக்கு ஒப்பிடக்கூடிய பிடியை வலுப்படுத்துவதை சீன அரசாங்கம் ஒருபோதும் தளர்த்தவில்லை.

திபெத்தில் திபெத் மக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மிக தீவிரமாக இடம்பெறுகின்றனஇசந்தேகத்திற்கு இடமானவர்கள் சட்டவிரோத கைதுகள் தடுப்பு மற்றும் போலியான தண்டனைகளை எதிர்கொள்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு உலகமும் நெருக்கடியில் சிக்கியது – திபெத்தை பொறுத்தவரை ஏற்கனவே துயரமான நிலையில் காணப்பட்ட நிலவரம் மிகமோசமானதாக மாறியுள்ளது.

சீனா கொவிட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டதுசீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏனைய பகுதிகளின் நிலைமை குறித்த துல்லியமான சரியான தகவல்கள் இல்லை.

எனினும் திபெத்தில் சமீபத்திய கொவிட் பரவல் திபெத்தை நெருக்கடியான நிலையில் தள்ளியுள்ளதுடன் திபெத்தில் வாழ்க்கையை சகிக்க முடியாததாக மாற்றியுள்ளது.

2022 ஆகஸ்;ட் 7 ம் திகதி கொரோனா திபெத்தில் மீண்டும் பரவத்தொடங்கியது அதன் பின்னர் முடக்கல்கள் நடைமுறைக்கு வந்தன. திடீர் கொவிட் பரவலால் திபெத் அரசாங்கமும் அதிர்;ச்சியடைந்தது.

வழமைபோல  நிலைமையை அவதானிக்க விரும்பிய   நிலைமையின் பாரதூர தன்மையை  அறிய விரும்பிய  பத்திரிகையாளர்கள் கண்காணிப்பாளர்களிற்கு சீனாஅனுமதி மறுத்தது.

சீனாவின் ஊடகங்கள் மூலம் மாத்திரமே திபெத்தின் கொரோனா நிலவரம்குறி;த்த விபரங்கள் வெளியாகின்றன சீன அரசாங்கத்தின் விருப்பங்களை மாத்திரம் நிறைவேற்றுவதால் அது  உலகிலேயே மிகவும் பக்கச்சார்பானதாக காணப்படுகின்றன சீன ஊடகங்கள்.

திபெத்தில் நிலைமை  கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது,மக்கள் சீனாவின் நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர் போன்ற  சித்தரிப்புகளில் சீன ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன.

போதியளவு உண்மை தகவல் வெளிவராததன் காரணமாக திபெத்தில் காணப்படும் கொரோனா வைரஸ் குறித்து சீனாவின் சமூக ஊடகங்கள் அல்லது வேறு சில டிஜிட்டல் தொடர்பாடல் சனல்கள் வெளியிடுகின்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே உண்மையை மதிப்பிட முடியும்.

திபெத்தியர்களும் சீனாவின் இணைய நிகழ்வுகளும் வெளியிடுகின்ற முறைப்பாடுகளை ஆராய்ந்தால் உலகிற்கு தெரிவிப்பதை விட நிலைமை மோசமாக உள்ளது என்ற முடிவிற்கு வரமுடியும்.

இந்த கொரோனாபெருந்தொற்று பரவல் திபெத்திலேயே பரவியது என தெரிவிப்பதில் உறுதியாக காணப்பட்ட சீன அரசாங்கம் பரவிக்கொண்டிருப்பது ஒமிக்ரோனின் மூன்றாம் தலைமுறை துணை மாறுபாடு எனவும் தெரிவித்தது.

இந்த துணை மாறுபாடு சீனாவில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சீனா தெரிவித்தது.

திபெத்தின் முக்கிய நகரமான சிகட்சேவை இலக்குவைத்த சீன அரசாங்கம் அங்கிருந்தே கொரோனா பரவியது என குறிப்பிட்டது.

குறிப்பிட்ட நகரத்தின் எல்லைகளாக பூட்டான்  நேபாளம்  இந்தியாவின் எல்லைகள் காணப்படுகின்றனஇதன் காரணமாக சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி வெளிநாட்டிலிருந்து திபெத்திற்குள் பரவியது – சீனாவிற்கும் இதற்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டது.

எல்லையில் உள்ள மூன்று நாடுகள் மூலமாக திபெத்தில் கொரோனா பரவியிலிருக்கலாம் என சீனா தெரிவித்தது.

நேபாளத்துடனான இரு வர்த்தக பாதைகள் உடனடியாக மூடப்பட்டன.

முதலாவது நோயாளி திபெத்தின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் துணைமாறுபாடுகள்  சீனாவின் பகுதிகளில் காணப்பட்டன.

பூஜ்ஜிய கொவிட் கொள்கை காரணமாக கொவிட்டின் தாக்கம் மற்றும் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தொற்றுநோய் நீக்கிகளுடன் வாகனங்கள் வீதிகளில் காணப்பட்டன.

கொவிட் பரிசோதனை பாரிய அளவில் இடம்பெற்றது மருத்துவர்கள் அனைத்து பகுதிகளிற்கும் பாதுகாப்பு கருவிகள் உடைகளுடன் அனுப்பப்பட்டனர்.

கொவிட்டினால் பாதிக்கப்பட்ட எவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்படும் என சீனாவின் கொள்கை உறுதியளித்தது.

சீனா கொரோனா பெருந்தொற்றை மிகவும் சிறப்பான முறையில் கையாள்கின்றது என உலகிற்கு காண்பிக்கப்படுகின்றது ஆனால் யதார்த்தம் என்பது  வேறுவிதமானதாக காணப்படுகின்றது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை என்பதுடன் பொதுமக்களின் நலன்களிற்கு ஏற்றவகையாக அவை காணப்படவில்லை.

எல்ஹசாவில் உள்ள தனிமைப்படுத்தல்  நிலையமொன்று தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பெண் திபெத் பெண் ஒருவர் ஒழுங்கற்ற அழுக்கான தனிமைப்படுத்தல்  நிலையத்தின் படத்தை காண்பித்துள்ளார்.

அது குப்பைகள் செங்கற்கள் பலகைகள் கழிவறை நீர் நடைபாதைகளை காண்பித்துள்ளது.

நோயாளிகள் படுக்கைகளில் வரிசைகளில் காணப்படுவதையும் தூசி நிறைந்த தளபாடங்களையும் காண்பிக்கும் படத்தையும் மற்றுமொரு திபெத் பெண் வெளியிட்டுள்ளார்.

இந்த மையங்களில் பராமரிப்பாளர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றதுஇமேலும் அடிப்படை மருத்துவ உதவிகள் இல்லாதது போல தோன்றுகின்றதுஇதேவையான பொருட்களுடன் லொறிகளை அனுப்பியுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்தாலும் திபெத்தில் உணவு பற்றாக்குறை காணப்படுகின்றது.

நிலைமை மோசமாக உள்ளது நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

கொவிட் அற்ற பகுதிகளை உருவாக்கும் நோக்கத்தில் உள்ள நோயாளிகளிற்கு சாதகமற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ள சீன அரசாங்கம் இது குறித்து கரிசனை காட்டவில்லை.

கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள திபெத் மக்கள் தனிமைப்படுத்தல் முகாமிற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்படுகின்றனர் குடும்பங்கள் அவர்கள் குறித்த உரிய தகவல்கள் எதுவுமின்றி அவர்கள் திரும்பி வருவார்களா என்பது தெரியாத நிலையில் வாழ்கின்றன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More