இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், அவர் மன்னரான பின் முதலாவது அரசுப் பயணமாக இன்று (29) ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ளார்.
ஜேர்மன் ஜனாதிபதி மாளிகையில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்குள்ள அதிகாரப்பூர்வ விருந்தினர் புத்தகத்தில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
“ஜேர்மனியும் இங்கிலாந்தும் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவிட்டன” என்றுஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் (Frank-Walter Steinmeier) இதன்போது தெரிவித்தார்.
மன்னராக தனது முதல் அரசு பயணத்துக்கான இடமாக ஜெர்மனியைத் தேர்ந்தெடுப்பதற்கான மன்னரின் முடிவு, “ஜெர்மன்- இங்கிலாந்து உறவுகளுக்கு ஒரு முக்கியமான சைகை” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : மன்னர் சார்லஸின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு
சார்லஸ் இளவரசராக இருக்கும்போது சுமார் 40 முறைகளுக்கும் மேல் ஜேர்மன் சென்றுள்ளார். எனினும், அவர் மன்னரான பின்னர் ஜேர்மன் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னதாக பிரான்ஸ் செல்வதற்கே இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் திட்டமிட்டிருந்தார். எனினும், அங்கு இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அது தடைப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.