அரசு முறை பயணமாக ஜெர்மன் சென்றுள்ள இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், அங்கு உள்ள சுற்று கிராமமான ப்ரோடோவினுக்கு சென்று பாலாடை கட்டித் தயாரிப்புகளை பார்வையிட்டார்.
பெர்லினில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுசூழல் கிராமத்துக்கு சென்ற மன்னர் சார்லஸ் உடன் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்கு வால்டரும் உடன் சென்றிருந்தார்.
சுற்று சூழல் கிராமத்தில் பாலாடை கட்டிகளைத் தயாரிப்பை பார்வையிட்ட மன்னர் சார்லஸ், அதன் தயாரிப்பிலும் ஈடுபட்டார்.
பின்னர் அங்கு கிரீடத்தின் வடிவத்தில் ஒரு கேக்கை வெட்டி அவர் அனைவருக்கும் வழங்கினார்.
மேலும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் வாழ்த்துத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இங்கிலாந்து மன்னர்