பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக பாரீஸில் ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள், பொலிஸார் மீது கற்களையும் பட்டாசுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் சைக்கிள்களை தீயிட்டுக் கொளுத்தி கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்களை, பொலிஸார் கண்ணீர்புகை குண்டு வீசி விரட்டியடித்தனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரனின் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால், அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு நடத்தாமல், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 இருந்து 64 ஆக உயர்த்த பிரான்ஸ் அரசாங்கம், முடிவெடுத்ததை கண்டித்து நாடு முழுவதும் ஜனவரியிலிருந்து மக்கள் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.