December 7, 2023 7:38 pm

பிரித்தானியாவில் மருமகளின் கெளரவ கொலைக்கு காரணமான பெண் விடுதலை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
மருமகளின் கெளரவ கொலைக்கு காரணமான பெண் விடுதலை

விவாகரத்து கோரிய காரணத்துக்காக தனது மருமகளை கொலை செய்ய திட்டம் தீட்டிய மாமியார், தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

27 வயதான சுர்ஜித் அத்வால் என்ற தனது மருமகளை கொலை செய்ய தூண்டிய குற்றத்திற்காக மேற்கு லண்டனை சேர்ந்த பச்சன் கவுர் அத்வால், 2007ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1998ல் இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே அவர் தண்டனை அனுபவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது 86 வயதான பச்சன் கவுர் அத்வால் தமது மருமகளுக்கு இன்னொருவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளதும், அதனால் தமது மகனை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிந்துகொண்டுள்ளார்.

இது தங்கள் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் என கருதிய அவர், தமது மருமகளை இந்தியாவுக்கு வரவழைத்து கெளரவ கொலைக்கு திட்டமிட்டுள்ளார்.

ஆனால், சுர்ஜித் அத்வால் கொலை உறுதி செய்யப்பட்டாலும், இதுவரை அவரது சடலம் மீட்கப்படவில்லை.

அத்துடன், இது குறித்து தமது உறவினர் ஒருவரிடம் கூறிய நிலையில், உறவினர், குறித்த தகவலை பொலிஸாரிடம் ரகசியமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறைத்தண்டனை பெற்ற பச்சன் கவுர் அத்வால் மறதி நோய் காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்தே பச்சன் கவுர் அத்வால் சிறையில் இருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்