Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ‘ஜி-7’ உச்சி மாநாடு ஆரம்பம்; ஹிரோஷிமாவில் பாதுகாப்பு தீவிரம்

‘ஜி-7’ உச்சி மாநாடு ஆரம்பம்; ஹிரோஷிமாவில் பாதுகாப்பு தீவிரம்

1 minutes read

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று (19) ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாடு, எதிர்வரும் 21ஆம் திகதி முடிவடைகிறது.

இந்த ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜப்பான் – ஹிரோஷிமாவில் குவிந்துள்ளனர்.

இதனையடுத்து, ஹிரோஷிமா நகரம், பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 7 உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ் மற்றும் குக் தீவு ஆகிய 7 நாடுகளும் விசேட அழைப்பின்பேரில் கலந்துகொள்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

‘ஜி-7’ உச்சிமாநாட்டின்போது, அணுசக்தி பெருக்கத்தின் அபாயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரச்சினை எழுப்பி, விவாதிக்க வழிவகுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

sunak

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More