June 5, 2023 11:46 am

பாடசாலை விடுதியில் தீ: 20 மாணவர்கள் பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
பாடசாலை விடுதியில் தீ

தென்னமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியாவில் உள்ள பாடசாலை விடுதியில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் தூங்கி கொண்டிருந்த போது, திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்ததுடன் தீ மளமளவென அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதுடன், பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே மீட்பு படையினர் விடுதிக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அதிகாலை நேரம் மாணவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் தீ விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்