மாசுபட்ட நகரமாக நியூயோர்க் இன்று பெயர் இடப்பட்டுள்ளது உலகில் மிக மாசுபட்ட நகரமாக இந்தியாவின் டெல்லி பார்க்கப்பட்ட இடத்தில் இப்போது நியூயோர்க் அதை வீட்டா மோசமான இடத்தில் உள்ளதென ஆய்வுகள் முடிவாக கூறியுள்ளது
கனடாவின் காட்டுத் தீயால் படரும் புகையால் நியூயோர்க் நகரம் மாசுபடுவதாகவும் கூறப்படுகிறது. புகைமூட்டம் நியுஜெர்சியில் ஹட்சன் நதியைக் கடந்து நியூயார்க் நகரில் மாசு ஏற்படுத்தி வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகமோசமான காற்றுமாசு டெல்லியிலும் பாக்தாத்திலும் ஏற்படுவதாகக் கருதப்படும் நிலையில் நியூயோர்க்கின் காற்று மாசு அதைவிடவும் மோசம் அடைந்தது.
தூசு, புகை மூட்டம் போன்றவை கிரேட் லேக்ஸ் பகுதியில் இருந்து வானம் முழுவதும் பரவியதால் நியூயார்க் மக்கள் வீடுகளில் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.