செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா டுவிட்டரின் புதிய கட்டுப்பாடு: பயனர்கள் அதிர்ச்சி

டுவிட்டரின் புதிய கட்டுப்பாடு: பயனர்கள் அதிர்ச்சி

0 minutes read

பல்வேறு பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலகளவில் ஐந்தில் ஒருவருக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் டுவிட்டர் தளம் உலகம் முழுதும் திடீரென முடங்கியது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப பணிகள் சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே எலான் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதன்படி, டுவிட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளையும், பிற பயனர்கள் ஆயிரம் பதிவுகளை, புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேவையற்ற தகவல்களை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.