December 7, 2023 9:44 am

மலேசியாவின் பாலியல் குற்றவாளியான தந்தைக்கு 702 வருட சிறைத்தண்டனை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மலேசியாவின் ஜொஹோர் மாவட்டத்தில் 53 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு 12 மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகள்கள் இருக்கின்றனர். இவர் 2018-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை, தனது சொந்த மகள்களை முவார் பகுதியிலுள்ள பக்ரி மற்றும் ஜலன் ஜெரம் டெபி எனும் இரு பகுதியிலுள்ள வீடுகளில் கொண்டு சென்று பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த கொடூர செயலால் 2 மகள்களில் ஒரு மகள் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து இந்த பணியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.

நீதிபதி அபு பக்கர் மனத், குற்றவாளி தனது கொடுமையான குற்றத்திற்காக உண்மையிலேயே வருந்தும் வகையில் அவருக்கு 702 வருட சிறைத்தண்டனையும், இத்துடன் 234 பிரம்படியும் கொடுக்கதீர்ப்பளித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்