September 28, 2023 9:57 pm

கேரளாவில் களைக்கட்டியது ஓணம் பண்டிகை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கேரளாவில் களைக்கட்டியது ஓணம் பண்டிகை

கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் ஆரம்பித்து, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அந்தவகையில், இன்றைய தினம் ஓணம் பண்டிகை கோலாகலமாக கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டுக்கு முன்பு அத்திப் பூ கோலம் போட்டு கொண்டாட்டங்களை தொடங்கி விட்டனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி ஸ்ரீ மகா கணபதி கோவிலுக்கு பொதுமக்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொச்சியில் உள்ள திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கேரளாவில் ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் ஒரு வீதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்