December 4, 2023 7:40 am

ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் தடை விதிக்கப்படும்; அமெரிக்கா எச்சரிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ரஷியாவுக்கு எதிராக கூடுதல் தடை விதிக்கப்படும்

உக்ரைனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போரை அடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது.

இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் ரஷ்யாவுக்கு பயணம் செய்துள்ளமை பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, “ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கும் வடகொரியாவின் எண்ணம் பற்றி குறிப்பிட்டு பேச விரும்புகிறேன்.

“இந்த போரை ரஷ்ய ஜனாதிபதி புதின் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். ரஷ்ய பேரரசின் பெருமையை மீட்டெடுக்க போகிறோம் என அவர் நினைத்து கொண்டார்.

“ஆனால், ஏகாதிபத்தியம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் அவர் தோல்வி அடைந்து விட்டார்.

“ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களையும் மற்றும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான பணம் செலவிட்டு அவற்றையும் இழந்த பின்னர், கிம் ஜாங் அன்னிடம் உதவி கேட்டு புதின் கெஞ்சி கொண்டிருக்கிறார் என பேசியுள்ளார்.

“வடகொரியா மற்றும் ரஷ்யா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்து இருக்கிறோம். தேவைப்பட்டால், கூடுதல் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்