December 6, 2023 11:51 pm

ஜெலன்ஸ்கி ஜோபைடனின் 3வது சந்திப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வெள்ளை மாளிகை அறிவிப்பின் படி நேற்றைய தினம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஜோ பைடனை சந்தித்தார்.

உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21-ம் திகதி அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெள்ளை மாளிகை வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்