December 6, 2023 11:55 pm

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று எச்சரிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது.

இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.

இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார்.

வௌவால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்துள்ளார்.

அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்றிருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டுள்ளது.

இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்