December 8, 2023 4:08 pm

அமெரிக்க துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அமெரிக்க துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா, லூயிஸ்டன், மைனே பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயுதம் ஏந்திய ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவ்வாறு 22 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய சந்தேநபர் தலைமறைவாகியுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், பாதுகாப்புப் பிரிவினர் தெளிவூட்டியுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்