பாடசாலை விடுமுறை தொடர்பில் இலங்கை கல்வியமைச்சு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.