December 3, 2023 9:48 am

இறந்தவரின் படத்தை அஸ்தியில் வரைந்து அசத்திய ஓவியக் கலைஞர்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
இறந்தவரின் படத்தை அஸ்தியில் வரைந்து அசத்திய ஓவியக் கலைஞர்!

இந்தியா – கேரளாவில் உன்னி வர்ணசாலா என்ற ஓவியக் கலைஞர், அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைந்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்ணொருவர், இறந்த தனது கணவரின் அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைந்து அதனைத் தன்னுடன் வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததையடுத்து, குறித்த ஓவியத்தை அவர் வரைந்துள்ளார்.

தனது கணவரின் புகைப்படத்தை ஓவிய கலைஞரிடம் பெண் வழங்கியுள்ளார்.

அதனை வைத்து அப்பெண்ணின் கணவரின் ஓவியத்தை ஓவியர் உன்னி வர்ணசாலா வரைந்து கொடுத்துள்ளார்.

இறந்தவரின் அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைவது குறித்து அவர் கூறியதாவது, “நான் இதற்கு முன்பு இதுபோன்று செய்ததில்லை. வாழ்க்கையில் இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இது கடைசி முறையாகவும் இருக்கலாம். ஒரு கலைஞனாக இந்தப் பணி எனக்கு மிகவும் சவாலானது. தற்போது நான் ஓவியத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்” என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்