December 3, 2023 10:43 am

ஹிஸ்புல்லா குழுவுடன் தொடர்பு; ஜெர்மனியில் திடீர் சோதனை நடவடிக்கைகள்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ஜெர்மனியில் திடீர் சோதனை நடவடிக்கைகள்

ஜெர்மனியின் ஹம்பர்க் (Hamburg) நகரிலுள்ள இஸ்லாமிய நிலையத்துக்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) குழுவுக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஜெர்மன் பொலிஸார் அந்நகரின் ஏராளமான இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹிஸ்புல்லா (Hezbollah) குழுவுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து ஜெர்மன் பொலிஸார் தீவிரமாக புலனாய்வு செய்து வருகின்றனர்.

இதற்காக 7 மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் பொலிஸார் சோதனையிட்டனர்.

இஸ்லாமிய நிலையத்தின் துணைக் குழுக்கள் என நம்பப்படும் ஏனைய 5 சங்கங்களும் குறிவைக்கப்பட்டன.

இஸ்ரேலுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டும் வகையில் அந்தக் குழு செயல்படுவதாக ஜெர்மனி தெரிவிக்கிறது.

நாட்டின் அரசமைப்புச் சட்ட ஒழுங்கை அதன் நடவடிக்கைகள் பாதிப்பதாக ஜெர்மன் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மூலம் : Reuters

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்