செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இந்திய பிரஜை ஒருவர் மதுபான போத்தல்களுடன் கைது!

இந்திய பிரஜை ஒருவர் மதுபான போத்தல்களுடன் கைது!

0 minutes read

 

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயற்சித்த இந்திய பிரஜையொருவர் வெளிநாட்டு மதுபான போத்தல்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 27 வயதுடைய இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோதமான முறையில் அனுமதிபத்திரம் பெற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டு மதுபான போத்தல்களை இலங்கைக்குள் கடத்த முயற்சித்துள்ளார்.

இவ்வாறு ஒரு லீற்றர் நிறையுடைய 12 வெளிநாட்டு மதுபான போத்தல்கள்களுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை இன்று காலை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை 12000 ரூபா அபராதம் விதித்து விடுவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.