கொரோனா பாதிப்பு; சீனாவில் தொடரும் புதிய சிக்கல்…….

சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோரால் ஏற்படும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4வது நாளாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய வூகானில் தொடர்ந்து 4வது நாளாக புதிய பாதிப்புகள் பதிவாகவில்லை.  சனிக்கிழமை வர்த்தக நகரமான ஷாங்காயில் 14 பேர், தலைநகர் பீஜிங்கில் 13 பேர் உட்பட கொரோனா பாதிப்புக்குள்ளான 41 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் சீனர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்